சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள நதிமூலம் மக்கான் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி (55). இவர் தச்சர் வேலை செய்துவருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். ராமசாமி தனியாகவும், அவரது மகன்கள் தனியாகவும் வசித்துவந்தனர்.
இளைய மகன் சீனிவாசன் (32) சொத்தை பிரித்து தருமாறு ராமசாமியுடன் அவ்வப்போது தகராறு செய்துவந்தார். இதனைப் பார்க்கும் அப்பகுதியினரும் சீனிவாசனை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிவைப்பர்.
அதேபோல், நேற்றிரவும் சீனிவாசன் குடிபோதையில் ராமசாமியின் வீட்டிற்கு வந்து சொத்தை பிரித்து தருமாறு தகராறில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் இரும்புக் கம்பியால் ராமசாமியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராமசாமி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
உயிரிழந்த ராமசாமியின் சடலம் தந்தை இறந்ததையறிந்த சீனிவாசன் தப்பியோடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாக உள்ள சீனிவாசனை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ’ஓட்டுக்காக காசு, குவார்ட்டர் கொடுக்கமாட்டேன்’ - மற்ற கட்சியினரை அலறவிடும் சுயேச்சை!