தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலத்திற்காகத் தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன் - காவல்துறையினர் விசாரணை

சேலம்: கொண்டாலம்பட்டி அருகே நிலத் தகராறில் பெற்ற மகனே தந்தையைக் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Son arrested for killing his father
Son arrested for killing his father

By

Published : Jan 21, 2020, 1:18 PM IST

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (62). இவருக்கும் இவரது மகன் பூபதிக்கும் ஆறுமாதத்திற்கு முன்பு வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக, பழனிச்சாமி தனது மகனை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் பூபதி தனது தந்தையிடம் வீட்டிற்கு அருகேவுள்ள காலி இடத்தை தனக்கு எழுதிக்கொடுக்கமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அதற்கு பழனிச்சாமி மறுப்பு தெரிவிக்கவே, சிறிது நேரத்திற்குப் பிறகு தூங்கிக்கொண்டிருந்த தந்தையின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும் கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை அருகேவுள்ள கிணற்றில் வீசியும் சென்றுள்ளார்.

இச்சம்பவம் அறிந்த நிகழ்விடத்திற்கு வந்த கொண்டாலாம்பட்டி காவல் துறையினர் பழனிச்சாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பூபதியைத் தேடிவந்தனர்.

நிலத்திற்காக தந்தை கொன்ற மகன் கைது

இதனையடுத்து தலைமறைவாக இருந்த பூபதியை, நேற்று அதிகாலை கைதுசெய்த காவல் துறையினர், அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். பின்னர் பூபதி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:போலியோ சொட்டு மருந்தால் குழந்தை இறப்பு: கதறும் பெற்றோர்!

ABOUT THE AUTHOR

...view details