தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவிவந்தது. குறிப்பாக சேலம் மாவட்டத்திலுள்ள தனியார், அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக கரோனா நோயாளிகளை அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை அமைச்சரிடம் வழங்கிய தன்னார்வலர்கள்! - ஆக்சிஜன் பற்றாக்குறை
சேலம் மாவட்ட தன்னார்வலர்கள், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வழங்கினர்.
இதனைத் தவிர்க்கும் விதமாக தன்னார்வலர்கள் பலர் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை அரசுக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாரமங்கலம் பகுதியிலுள்ள செங்குந்தர் கல்வி கழகம் சார்பில் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மூன்று ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை தமிழ்நாடு மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், செங்குந்தர் கல்விக் கழகத்தின் தலைவர் அழகரசன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.