சேலம் மாவட்டத்தை அடுத்து உள்ள நாகியம்பட்டி எனும் கிராமத்தில், ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது, அதே கிராமத்தைச் சோ்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் போட்டியில், தன் பெயரை பதிவு செய்யாமல், தனது சகோதரனின் பதிவு எண்ணைக் கொண்ட டி - சர்ட்டை அணிந்து கொண்டு, மாடு பிடி வீரராக களம் கண்டார்.
அப்போது களத்தில் இருந்த பிரபாகரன் மாடு பிடிக்கும் போது, துள்ளி வந்த காளை அவரது வயிற்றில் முட்டியது. இதில் காயமடைந்த பிரபாகரன் மேல் சிகிச்கைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.