ஓமலூர் அருகே பள்ளிக்குச் சென்று திரும்பிய ஆறு வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபர்கள் மிட்டாய் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும், குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் சேலம் மாவட்ட சிபிஎம் குழு காவல் துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
சிபிஎம் சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல் இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் பி. ராமமூர்த்தி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம் நடந்தவற்றை கேட்டறிந்தனர்.
அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பின்பு சிறுமி மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட குற்றவாளிகளை மாவட்ட காவல் துறை உடனடியாக கண்டுபிடித்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், குறிப்பாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதையும் படிக்க: பிஆர்பி நிறுவனம் மீண்டும் குவாரி இயக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி!