சேலம்:சேலத்தில் மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மாரத்தான் என்பது அனைவருக்கும் முக்கியம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாரத்தான் ஓட்டம் ஓட வேண்டும். உடல் வலிமையை மன வலிமை தைரியத்தை அதிகரிக்க மாரத்தான் எப்பொழுதுமே உறுதுணையாக இருக்கும்.
அனைத்து விளையாட்டிற்கும் ஓட்டம் என்பது தேவைப்படுகிறது. அதிகளவில் கிராமப்புறங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும். என்னைப் போல இன்னும் நிறைய இளைஞர்கள் விளையாட்டில் சாதிக்க வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை. இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடுவேன்.