சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 5ஆவது நடைமேடையில் ஐந்து பைகளுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்தவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர்.
ரயில் நிலையத்தில் வெள்ளி பொருள்கள் பறிமுதல்: வியாபாரிக்கு அபராதம் - சேலம் ரயில்வே காவல்துறையினர்
சேலம்: ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.57.60 லட்சம் வெள்ளி பொருள்களை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
![ரயில் நிலையத்தில் வெள்ளி பொருள்கள் பறிமுதல்: வியாபாரிக்கு அபராதம் salem](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10488346-312-10488346-1612361213575.jpg)
மேலும் அவரிடமிருந்த அந்த பைகளையும் சோதனையிட்டனர். அதில் வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருள்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்மு அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் பைகளை கொண்டு வந்தவர் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த வியாபாரி செந்தில் குமார் என்பதும் அவர் சேலத்தில் இருந்து ஆந்திரா மாநிலம் செல்லும் ரயிலில் வெள்ளி பொருட்களை எடுத்து செல்லவிருந்தது தெரியவந்தது.
அதுமட்டுமல்லாது வெள்ளி பொருள்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பதும் தெரிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி பொருள்கள் சுமார் 80 கிலோ என்பதும், அதன் மதிப்பு ரூ.57.60 லட்சம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி பொருள்கள் கலால்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் வியாபாரி செந்தில்குமாருக்கு ரூ.3.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.