தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சித்த மருத்துவர் சிவராஜ் சிவகுமார் உடல் நல்லடக்கம்! - சித்த மருத்துவர் சிவராஜ் சிவகுமார்

சேலம்: உடலக்குறைவால் இறந்த பிரபல சித்த மருத்துவர் சிவராஜ் சிவகுமார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Burial of Siddha doctor Sivakumar's body  Sivakumar's body buried in Salem  Siddha doctor Sivakumar  Shivraj Siddha Doctor Sivakumar's body buried in Salem  Shivraj Siddha Doctor Sivakumar  சித்த மருத்துவர் சிவராஜ் சிவகுமார் உடல் நல்லடக்கம்  சித்த மருத்துவர் சிவராஜ் சிவகுமார்  சிவராஜ் சித்த வைத்தியச் சாலை
Burial of Siddha doctor Sivakumar's body

By

Published : Feb 10, 2021, 7:48 PM IST

சேலத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் சித்த வைத்தியச் சாலை மருத்துவர் சிவராஜ் சிவகுமார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனில்லாமல் நேற்று (பிப்.09) நள்ளிரவு 12 . 05 மணியளவில் இயற்கை எய்தினர். அவருக்கு வயது 78 . அவரின் உடல் சேலம் சிவதாபுரம் அருகேயுள்ள அவரது பூர்வீக வீடான அகஸ்தியர் மாளிகையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து, இன்று (பிப். 10) மாலை 5 மணி அளவில் அவரின் குடும்பத்திற்குச் சொந்தமான தோட்டத்தில் சிவராஜ் சிவகுமாரின் உடல் குடும்ப முறைப்படி சடங்கு முடிக்கப்பட்டு, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மருத்துவர் சிவராஜ் சிவகுமார் இறப்பு சித்த மருத்துவ உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்த மருத்துவர் சிவராஜ் சிவகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்

இதையும் படிங்க:பிரபல சித்த வைத்தியர் சிவராஜ் காலமானார்

ABOUT THE AUTHOR

...view details