தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியிடம் அத்துமீறிய கூலித்தொழிலாளி கைது! - Arrested wage laborer in pocso

சேலம்: சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு துன்புறுத்திய கூலித்தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்
சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்

By

Published : Jun 16, 2020, 12:04 PM IST

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகில் உள்ள புள்ளாக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த நடேசனின் மகன் வடிவேல் (47). இவர் அதே பகுதியில் கூலிவேலை செய்து வருகிறார். வடிவேலுவுக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார்.

இந்நிலையில் வடிவேல், புள்ளாக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு பயிலும் 11 வயது சிறுமியிடம், செல்போனில் ஆபாச வீடியோ காண்பித்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.

இதில் பயந்துபோன சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், வடிவேல் மீது சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள், வடிவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆத்தூர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ஆபாசமாக புகைப்படம் எடுத்து சிறுமியை தற்கொலைக்குத் தூண்டிய இளைஞர்கள் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details