தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 7 பேர் குணமாகினர் - சேலத்தில் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த ஏழு பேர் குணம்

சேலம்: அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்று பாதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழு பேர் குணமடைந்தனர்.

seven people recovered from corona in salem says collector
seven people recovered from corona in salem says collector

By

Published : Apr 17, 2020, 10:55 AM IST

சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதித்தவர்கள் 22 பேர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்றுவந்தனர். அவர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த உணவு வகைகளுடன் தீவிர சிகிச்சை, கண்காணிப்பு மருத்துவர்களால் அளிக்கப்பட்டது.

இதனால் வெகு விரைவாக தொற்று பாதித்தவர்கள் உடல் நலம் தேறி வந்தனர். இதனிடையே, இந்தோனேசியா நாட்டில் இருந்து சேலம் வந்தவர்கள் உள்பட 9 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர்கள் குணமடைந்தனர் என்பதும் அவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களில் 7 பேருக்கான எக்சிட் பரிசோதனையிலும் பாதிப்பு இல்லை என்ற முடிவு கிடைத்தது. இதையடுத்து, இந்தோனேசியர்கள் 4 பேர், சென்னை வழிகாட்டி உள்பட 7 பேரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.

செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்

இவர்களில் கரோனா நோய்த் தொற்றை சேலத்தில் பரப்பியதாகக் கைதான இந்தோனேசிய மதபோதகர்கள் 4 பேர், சென்னை வழிகாட்டி உள்ளிட்ட 5 பேர் நீதிமன்ற காவலில் உள்ளனர். அதனால் அவர்கள் 5 பேரையும் நேற்று (ஏப்ரல் 16) காவல்துறையினர் கைது செய்து சேலத்திலிருந்து அழைத்துச் சென்று, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இது தவிர சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் இருவர் குணமடைந்த நிலையில் நேற்று மாலை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .

இதற்கான நிகழ்ச்சி சேலம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் நிர்மல் சன், அரசு மருத்துவமனை முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு குணம் அடைந்த இருவரையும் கைகளை தட்டி அவர்களுக்கு காய்கறி பைகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கி அனுப்பி வைத்தனர்.

இதைதொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், 'சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதித்த நிலையில் 22 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் வியாழக்கிழமை ஒரே நாளில் 7 பேர் குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வீட்டுக்கு திரும்பியவர்கள் 14 நாட்கள் கட்டாயம் வீட்டிலேயே இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. கரோனோ பரவுவதை தடுக்க சமூக இடைவெளி கடைபிடிக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வீட்டைவிட்டு யார் வெளியே வந்தாலும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

முகக் கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நியாய விலைக் கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், வங்கிகள் ஆகியவற்றின் முன்பு கூட்டம் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அங்கு செல்வோர் நிச்சயமாக சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். சேலத்தை பொறுத்தவரை இதுவரைக்கும் 1,124 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை சேலம் மாவட்டம் தீவிர கரோனா நோய்த் தொற்று பரவல் மாவட்டமாக உள்ளது. எனவே தற்போது உள்ள விதிமுறைகள் அனைத்து பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க... கிருமி நாசினி மருந்து தெளிக்கும் ராட்சத இயந்திரம் சேலத்தில் அறிமுகம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details