சேலம் அருகே கொண்டலாம்பட்டி பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சீமான் சுந்தர்ராஜன் (55). இவர் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் கிரானைட் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்ற சீமான், வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கிரானைட் நிறுவனத்தில் சென்று விசாரிக்கையில், அவர் வேலைக்கு வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரைத் தேடிய உறவினர்கள், எங்கும் கிடைக்காததால் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.
மாயமாகிய சீமான் சடலமாக மீட்பு! - கொண்டலாம்பட்டி
சேலம்: கிரானைட் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றபோது மாயமான காவலாளி சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து சீமான் சுந்தரராஜனை உறவினர்கள் தேடியபோது, அவரது சைக்கிள் பாலம் ஒன்றின் மேல் நின்றுகொண்டிடுந்தது தெரிய வந்தது. பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் பாலத்திற்கு அடியில் தேடியதில் சீமான் சுந்தரராஜன் கொலை செய்யப்பட்டு பாலத்திற்கு கீழ் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். சீமான் சுந்தரராஜன் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.