தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பலத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு!

சேலம் :   பள்ளப்பட்டியில் ரயில் தண்டவாளத்தின் அருகே முட்புதரில் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

selam lady death

By

Published : Nov 21, 2019, 11:03 AM IST

சேலம் பள்ளப்பட்டியில் ரயில் தண்டவாளத்தின் அருகே முட்புதரில் பலத்த காயங்களோடு பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பள்ளப்பட்டி காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டனர்.

மேலும், காவல்துறையினரின் விசாரணையில் சடலமாகக் கிடந்தவர், அப்பகுதியைச் சேர்ந்த அப்துல்லா என்பவரின் மனைவி (42) குல்ஜார் என்பது தெரியவந்தது. உடற்கூறு ஆய்வுக்காக குல்ஜார் சடலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தண்டவாளத்தின் அருகே சடலம் கிடந்ததால் ரயிலில் அடிபட்டு, உயிர் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

சடலமாக மீட்கப்பட்ட பெண்

மேலும் திருமணத்தை மீறிய உறவு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற அடிப்படையில் மூன்று பேரைப் பிடித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

விற்கப்பட்ட குழந்தை ஒரே நாளில் மீட்பு - காவல் துறைக்கு பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details