சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சேலம் வடக்கு , சேலம் தெற்கு , சேலம் மேற்கு , வீரபாண்டி , ஓமலூர் , எடப்பாடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
சேலம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு தீவிரம் - Security forces
சேலம்: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கரூப்பூர் அரசு பொறியியல் கல்லூரிக்கு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி
இந்நிலையில், அங்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய நிலையில் காவல்துறையினர் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் ஒவ்வொரு மேசைக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.