தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 20, 2019, 6:10 PM IST

ETV Bharat / state

சேலத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்!

சேலம்: புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 46 கடைகளின் உரிமையாளர்கள் 36 மாத வாடகை நிலுவை தொகையை செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவுபடி மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்தனர்.

கடைகளுக்கு சீல் வைப்பு


சேலம் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வாடகை ஒன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை முதல் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 520 கடைகளுக்கும் வாடகை தொகை சந்தை மதிப்பீட்டில் உயர்த்தப்பட்டது.
இதனையடுத்து உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்க வலியுறுத்தி வாடகைதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி உயர்த்தப்பட்ட வாடகை தொகையிலிருந்து 25 சதவீதம் குறைத்து வசூலிக்க கடந்த அக்டோபர் 15ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும் அதை நான்கு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும், அப்படி செலுத்தத் தவறும் பட்சத்தில் மாநகராட்சி ஆணையர் பொது ஏலம் விட்டுக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.

கடைகளுக்கு சீல் வைப்பு

அதன்படி நான்கு வார கால அவகாசம் கொடுத்து அதில் சிலர் வாடகை நிலுவை தொகையை கட்டினர். 46 கடைக்காரர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி 36 மாத நிலுவை தொகையை, செலுத்தாததால் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 46 கடைகளுக்கும் மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் காவல் துறை முண்ணிலையில் சீல் வைத்தனர்.

இதையும் படிங்க...பெண்ணை தரக்குறைவாக பேசியதால் பேருந்து சிறைபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details