தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் விரோத சட்ட திருத்தங்களை திரும்ப பெற கோரி எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்! - salem district news

சேலம்: புதிய தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மக்கள் விரோத சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் விரோத சட்ட திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும்
மக்கள் விரோத சட்ட திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும்

By

Published : Aug 31, 2020, 4:39 PM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் புதிய தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மக்கள் விரோத சட்ட திருத்தங்களை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (ஆக.31) எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் அப்சர் அலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதன் கட்சியைச் சேர்ந்த மாவட்ட பிரமுகர்கள் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

மக்கள் விரோத சட்ட திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும்

பின்னர் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் மாவட்ட தலைவர் அப்சர் அலி கூறுகையில், "மத்திய அரசு பல்வேறு சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதில் புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020, கிரிமினல் சட்டத்திருத்தம் ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களில் எஸ்டிபிஐ கட்சி ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில், சேலத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். 100 ஆண்டுக்கு முந்தைய குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வரப்படுவதை கண்டிக்கிறோம்.

மக்கள் விரோத சட்ட திருத்தங்களை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மீண்டும் தொடர் போராட்டங்களை நடத்துவோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: விசிக ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details