தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2000 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி! - 2000 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட அறிவியல் கண்காட்சி

சேலம்: தனியார் கல்லூரியில் 2000 பள்ளி மாணவ மாணவியர் கலந்துகொண்ட மாநில அளவிலான இரண்டு நாள் அறிவியல் கண்காட்சி நேற்று நிறைவு பெற்றது.

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி

By

Published : Nov 23, 2019, 1:59 AM IST

சேலம் தனியார் கல்லூரியில் பள்ளி மாணவ மாணவியர்களின் அறிவியல் திறன், படைப்பாற்றலை வளர்த்தெடுக்கும் வகையில் மாநில அளவிலான இரண்டு நாள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இதில் சேலம், தருமபுரி , நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளி மாணவ மாணவியர் கலந்துகொண்டு தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.

பொது அறிவியல், சமூகம், சுற்றுச்சூழல், அறிவியல் குறும்படம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் தங்களின் புதுக் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி உற்சாகத்தோடு கலந்துகொண்டனர்.

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி

கண்காட்சியின் இரண்டாம் நாளான நேற்று சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழந்தைவேல் சிறந்த படைப்புகளை காட்சிப்படுத்தி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் .

இந்நிகழ்வில் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். முதல் பரிசு ஐந்தாயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு மூன்றாயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக இரண்டாயிரம் ரூபாய் மற்றும் 20 ஆறுதல் பரிசுகள் என மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டன.

இதையும் படிங்க :'இளைய அப்துல்கலாம்'களின் அறிவியல் கண்காட்சி!

ABOUT THE AUTHOR

...view details