தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான கண்காட்சி: ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்!

சேலம்: அம்மாபேட்டையிலுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான கண்காட்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்கள்
கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்கள்

By

Published : Jan 20, 2020, 8:00 PM IST

சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மாவட்ட அளவிலிருந்து 60க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான கண்காட்சி இன்று நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று, தங்களின் 80க்கும் மேற்பட்ட புதிய வகை அறிவியல் கண்டுபிடிப்புகளைக் காட்சிக்கு வைத்திருந்தனர்.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களின் அறிவியல் கண்டுபிடிப்பு திறமைகளை வெளியுலகிற்கு காட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை ஆண்டுதோறும் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது கண்காட்சியை நடத்திவருகிறது.

அதன்படி இன்று 2020ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான கண்காட்சி சேலத்தில் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்துகொண்டு மாணவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்து ஆர்வமுடன் விளக்கங்களை கேட்டறிந்தார்.

கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்கள்

இந்த கண்காட்சியில் மின்சார சேமிப்பு, தானியங்கி ரயில்வே கேட், எளிய முறையில் இயற்கை விவசாயம், வேகத்தடை மூலம் மின்னாற்றல் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட 88 புதிய வகை அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பள்ளிகளில் படிக்கும்போதே புதிய வகை அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி கண்காட்சியில் காட்சிப்படுத்தியது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக மாணவர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: புத்தகக் கண்காட்சியை மிஞ்சும் சாலையோர புத்தகக்கடைகள்!

ABOUT THE AUTHOR

...view details