சேலம்:சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள துவக்கப்பள்ளி ஒன்றில், சுமார் 50 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், அதே பள்ளியில் படிக்கும் 3ஆம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவர், மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் 3ஆம் தேதி மீண்டும் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது அம்மாவிடம் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்து கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.