சேலம் மாவட்டம் காரிப்பட்டி அரசுப்பள்ளியில் நான்காம், ஐந்தாம் வகுப்பு பயிலும் சந்தியா, வினோத்குமார், பிரியா, சின்னு ஆகியோர் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் இருக்கும் அரளி மரத்திலிருந்த அரளிக்காயை சாப்பிடும் காய் என நினைத்து, பறித்து சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் வீட்டிற்குச் சென்ற 4 மாணவர்களும் அவரவர் வீட்டில் மயங்கி விழுந்துள்ளனர். இதைப்பார்த்து பதறிப்போன பெற்றோர், அவசர ஊர்தி மூலம் குழந்தைகளை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.