தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 6, 2019, 10:51 PM IST

ETV Bharat / state

சேலத்தில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சேலம் : ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மகளிர் திட்டம் சார்பில் நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு குறித்து கோலப் போட்டியும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது.

சேலத்தில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீர் மேலாண்மை குறித்து மத்திய, மாநில அரசுகள் சார்பில் கருத்தரங்கு, பேரணி, செயல் விளக்க நிகழ்வுகள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு அளவில் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி , பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று சேலம் அடுத்த ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நீர் சேமிப்பு என்ற தலைப்பில் மாணவியர்களுக்கு கோலப்போட்டியும், நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் மாணவிகள் மத்தியில் நீர் மேலாண்மை குறித்து பேசுகையில், " வேலூர் மாவட்டத்தில் நீர் மேலாண்மை திட்டத்தை, வெற்றிகரமாக 20 ஆயிரம் பெண்கள் செயல்படுத்திக் காட்டினார்கள். அதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இது தொடர்பாக சென்ற மாதம் பிரதமர் மோடி தனது மன் கி பாத் வானொலி உரை நிகழ்ச்சியில் பாராட்டி பேசினார். அதேபோல சேலம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. " என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details