தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் விவேக் மறைவு - மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்திய இளைஞர்கள் - நடிகர் விவேக்குக்கு அஞ்சலி

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மரக்கன்றுகள் நட்டு நடிகர் விவேக்கின் மறைவுக்கு இளைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.

salem youth group tribute to vivek with planting tree
இளைஞர்கள் குழு சார்பில் மரக்கன்று நட்டு விவேக்குக்கு அஞ்சலி

By

Published : Apr 18, 2021, 5:17 PM IST

Updated : Apr 18, 2021, 5:24 PM IST

நகைச்சுவை நடிகர் விவேக் உடல்நலக் குறைவால் நேற்று (ஏப். 17) காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் ஏராளமானோர் அவரது உடலுக்கு நேரில் வந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் சேலம் இளைஞர்கள் குழுவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மரக்கன்றுகள் நட்டு மறைந்த நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தினர்.

இளைஞர்கள் குழு சார்பில் மரக்கன்று நட்டு விவேக்குக்கு அஞ்சலி

அதேபோல சேவகன் குழுவினர் நாட்டாண்மை கட்டடம் முன்பு சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விவேக் நட்டு வைத்த மரக்கன்று முன்பு நின்று அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: 'ஒரு கோடி மரங்கள் என்ற விவேக் கனவை நாம் நினைவாக்க வேண்டும்'

Last Updated : Apr 18, 2021, 5:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details