சேலம் திருமலைகிரி அருகே உள்ள மல்லபுரத்தம்பட்டியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (75). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன் முத்துவுடன் வசித்து வந்தார்.
தினமும் பழனியம்மாள் வீட்டருகே உள்ள நியாய விலைக் கடையின் அருகே அமர்ந்திருப்பது வழக்கம். இதுபோல் நேற்று பழனியம்மாள் நியாய விலைக் கடையின் அருகே சென்று அமர்ந்திருந்தார். அப்போது இருசக்கர வாகனம் ஒன்றில் சிறுவன் ஒருவன் வந்து பழனியம்மாளிடம் பேச்சு கொடுப்பதுபோல் பேசி, அவரிடம் இருந்த தோடு, மூக்குத்தியைப் பறிக்க முயன்றுள்ளார்.
ஆனால், மூதாட்டி நகைகளை கொடுக்க மறுத்து சிறுவனை விரட்டினார். இதில் ஆத்திரமடைந்த அச்சிறுவன் தன் சட்டை பையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மூதாட்டியின் கழுத்தை அறுத்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.