தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் நடந்த அடுப்பில்லா சமையல் போட்டி: வருவாய்த்துறையினர் ஆர்வமுடன் பங்கேற்பு - சேலம் மகளிர் தின போட்டிகள்

சேலம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட அடுப்பில்லா சமையல் போட்டியில் வருவாய்த்துறைப் பெண் ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சமைத்தனர்.

salem women's day celebration ahead female revenue officers participated in stoveless cooking competition
அடுப்பில்லா சமையல் உணவுகள்

By

Published : Feb 23, 2020, 11:28 AM IST

பொதுவாக உணவுப் பொருட்களை வேக வைத்தல், வறுத்தல், பொரித்தல் போன்ற சமையல் முறைகளுக்கு உட்படுத்தப்படும்போது சமையலில் உபயோகிக்கப்படும் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றில் உள்ள சத்துக்கள் பெரும்பாலானவை அழிந்துவிடுகின்றன என்று உணவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அடுப்பில்லா சமையல் உணவுகள்

இந்தநிலையில் வருகின்ற மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு இடையேயான அடுப்பில்லா சமையல் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பழம், பால் மட்டும் இல்லாமல் இயற்கையில் விளைவிக்கக்கூடிய காய், கனிகளைக் கொண்டு பெண்கள் சமைத்தனர். அடுப்பில்லாமல் சமைக்கும் சமையல் போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்குப் பரிசுகள் மகளிர் தினத்தன்று வழங்கப்படவுள்ளது.

அடுப்பில்லா சமையல் போட்டியில் வருவாய்த்துறையினர் பங்கேற்பு

இதையும் படிங்க:ஜெ. பிறந்தநாள் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்: அரசாணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details