தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 8, 2021, 9:10 PM IST

ETV Bharat / state

'தயவுசெய்து கரோனா நெறிமுறைகளை கடைபிடியுங்கள்' கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்த எம்எல்ஏ!

சேலம்: கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைபிடித்து, தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்று பாமக சட்டப்பேரவை உறுப்பினர் இரா. அருள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'தயவுசெய்து கரோனா நெறிமுறைகளை கடைபிடியுங்கள்' - எம்எல்ஏ அருள் கண்ணீர் மல்க வேண்டுகோள்
'தயவுசெய்து கரோனா நெறிமுறைகளை கடைபிடியுங்கள்' - எம்எல்ஏ அருள் கண்ணீர் மல்க வேண்டுகோள்

சேலம் மாவட்டத்தில், கரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நோய் தாக்கம் அதிகரிப்பதற்கான காரணம் குறித்தும், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் நிலை குறித்தும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோருடன் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் இரா.அருள் இன்று(மே.8) கலந்து ஆலோசித்தார்.

தொடர்ந்து மருத்துவர்களிடம் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக அனைவரும் கடைபிடித்து கரோனா நோய்த் தொற்றில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று சேலம் மாவட்ட மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
ஒவ்வொருவரும் என் குடும்ப உறுப்பினர்தான்.

நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மூலிகை மருந்துகளை உட்கொள்ளவேண்டும். மருத்துவர்களின் அறிவுரைகளை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும். ஊரடங்கு நாள்களில் அரசு கூறுவதை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று கைகூப்பி மக்களை வேண்டிக் கொள்கிறேன்" என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details