தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரை நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடெங்கும் ஆர்ப்பாட்டம் ஊர்வலம் நடந்து வருகிறது.
ஐதராபாத் கால்நடைமருத்துவருக்கு சேலம் கால்நடை மருத்துவர்கள் அஞ்சலி! - கால்நடை மருத்துவர்கள் அஞ்சலி
சேலம்: பாலியல் வன்புனர்வு செய்து கொலை செய்யப்பட்ட கால்நடை மருத்துவருக்கு சேலத்தில் கால்நடை மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உள்ள கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் ஐதராபாத் கால்நடை மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல இணை இயக்குநர் புருஷோத்தமன், கால்நடை மருத்துவர்கள் ஸ்ரீதேவி மற்றும் வாசகி, கலைச்செல்வி, செல்வகுமார், பரணி, வாசுதேவன், கோவிந்தன் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின் பெண் மருத்துவர்கள் நிகழ்ச்சியில் கூறியதாவது, இனி மாலை நேரத்தில் பணிக்கு செல்லும்போது பாதுகாப்புடன் செல்ல வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களுடன் செல்லக்கூடாது. அனைவருக்கும் காவலர் செயலியை செல்போனில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றனர்.