தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் உழவர் சந்தை திறப்பு - இடைவெளி விட்டு வரிசையில் நின்ற மக்கள் - Salem Farmer's Market

சேலம்: பேருந்து நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள உழவர் சந்தையில் ஏராளமானோர் வரிசையில் இடைவெளி விட்டு நின்று காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

சேலத்தில் உழவர் சந்தை திறப்பு
சேலத்தில் உழவர் சந்தை திறப்பு

By

Published : Mar 28, 2020, 8:22 PM IST

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்களை வாங்குவதற்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், சேலம் மாநகர மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக சிறப்பு சந்தை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை, தினசரி சந்தைகள் ஆகியவற்றை இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய பேருந்து நிலைய வளாகத்தில் இன்று முதல் காய்கறி சந்தை இயங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சேலத்தில் உழவர் சந்தை திறப்பு

அதன்படி, இன்று பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்ட சிறப்பு சந்தையானது காலை 6 மணி முதல் 9 மணி வரை திறக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் இடைவெளி விட்டு நின்று காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இருப்பினும், காய்கறிகள், பழங்களின் விலை சற்று கூடுதலாக விற்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சேலம் உழவர் சந்தைகள் இடமாற்றம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details