சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து சேலத்தை நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சென்றபோது சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
தனியார் பேருந்துடன் அரசுப் பேருந்து மோதி விபத்து அதில் தனியார் பேருந்து பலத்த சேதம் அடைந்த நிலையில், பேருந்தில் பயணித்த பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து அவர்கள் மீட்கப்பட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் படிக்க:'போராட்டம் தொடரும்' - தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் அறிவிப்பு!