கடந்த 2015ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்து நான்காண்டுகள் முடித்து, கடந்த ஓராண்டாக அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு பணிநிறைவு சான்று வழங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சேலத்தில் பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டம்
பயிற்சி மருத்துவர்களுக்கான பணிக்காலத்தை திடீரென நீட்டித்ததால்,சேலத்தில் பயிற்சி மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனரகம் சார்பில் நேற்று (மார்ச்.30) வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் , 2016ஆம் ஆண்டு மாணவர்கள் பயிற்சி முடிக்கும்வரை தற்போது உள்ள பயிற்சி மருத்துவர்கள் பணி நீட்டிக்கப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில், ”மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் இந்த உத்தரவால் தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். கடந்த ஒரு ஆண்டாக குறைந்த ஊக்கத்தொகை அனுப்பியதைப் பெற்றுக்கொண்டு மருத்துவ சேவை செய்து வந்த தங்களை மருத்துவ அலுவலராக நியமித்து பணியில் ஈடுபடுத்த வேண்டும். மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் இந்த உத்தரவை திரும்பப் பெறாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். இருப்பினும் மருத்துவ சேவையில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் போராட்டத்தை தொடருவோம்” எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு