தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களிடம் ரயிலில் கொள்ளை: புகைப்படம் வெளியானது - train theft

சேலம் : மாவலிப்பாளையத்தில் ஓடும் ரயில்களில் பெண்களிடம் நகைகள் பறித்த 4 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு ரயில்வே காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

4 பேரின் புகைப்படங்கள்

By

Published : May 8, 2019, 8:54 PM IST

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மாவலிப்பாளையத்தில் ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் இந்த வழியே செல்லும் ரயில்கள் மெதுவாக சென்று வருகிறது. இதனை தெரிந்துகொண்ட கொள்ளைக் கும்பல் ஒன்று கடந்த வாரம் நான்கு ரயில்களில் பயணித்த பெண்களிடம் தங்க நகைகளை பறித்து தப்பி சென்றது. இதனால் ரயில் பயணிகள் அச்சம் அடைந்தனர். இதனையடுத்து தமிழ்நாடு ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு சேலம் வந்து விசாரித்து தனிப்படை அமைத்தார்.

இந்த தனிப்படை சேலம் மற்றும் ஈரோடு ரயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தது. இந்நிலையில், ரயில்களில் நகை பறித்த 4 பேர் வடநாட்டு கும்பல் என தெரியவந்துள்ளது. அதில் ஒருவனது பெயர் பாலாஜி. இவனது கூட்டாளிகள் அவினேஷ் மற்றும் அமுல் ராமதாஸ் , உள்ளிட்ட 4 பேர் என தெரிய வந்திருக்கிறது. தற்போது, கொள்ளையர் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரின் புகைப்படங்கள் சேலம் மற்றும் ஈரோடு ரயில்வே காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கொள்ளையர்கள் 4 பேரையும் தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினர் கைது செய்திட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details