தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பீதியில் சுங்கச் சாவடி ஊழியர்கள்!

சேலம்: பல்வேறு இடங்களிலிருந்து வாகன ஓட்டிகள் வருவதால் தங்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுங்கச் சாவடி ஊழியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

salem toll
salem toll

By

Published : Apr 20, 2020, 1:51 PM IST

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கால் முடங்கியுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் விதமாக, 144 தடை உத்தரவில் சில தளர்வுகளை ஏற்படுத்தியுள்ள மத்திய அரசு, நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, ஓமலூர் உள்ளிட்ட அனைத்து சுங்கச் சாவடிகளிலும் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. தடை உத்தரவு காரணமாக 28 நாட்களாக வருமானமின்றி வீட்டிலிருந்த தங்களிடம் சுங்க வரி கட்டுவதற்கு எப்படி பணம் இருக்கும் என்று வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஓமலூர் சுங்கச்சாவடி ஊழியர் மோகன் ராஜ்

இந்நிலையில், சுங்கச் சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை என்றும், இதனால், நோய்த் தொற்று தங்களையும் தாக்கும் அபாயம் உள்ளதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஓமலூர் சுங்கச்சாவடி ஊழியர் மோகன் ராஜ் பேசுகையில், “வாகன ஓட்டிகளிடம் நேற்று இரவு 12 மணியிலிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தில் எந்த உயர்வும் இல்லை. அதே நேரத்தில் சில்லரை தட்டுப்பாட்டால் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. பல்வேறு இடங்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் மூலம் தங்களுக்கும் கரோனா வந்துவிடுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

கரோனா பரவும் பீதியில் சுங்கச் சாவடி ஊழியர்கள்!

இதையும் பார்க்க: காவல் துறை எச்சரித்ததால் தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details