தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முழு ஊரடங்கு : சேலம்-சென்னை விமான சேவை ரத்து - சேலம்-சென்னை விமான சேவை

சேலம்: முழு ஊரடங்கு காரணமாக, சேலத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த விமானங்கள் நாளை (மே.13) முதல் 10 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக ட்ரூஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

salem to chennai flight service
salem to chennai flight service

By

Published : May 12, 2021, 2:26 PM IST

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் இருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

இதையடுத்து, சேலத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமான சேவை நாளை (மே.13) முதல் வரும் 22ஆம் தேதி வரை பத்து நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக சேலம் விமான நிலைய இயக்குநர் ரவீந்திர வர்மா தெரிவித்துள்ளார்.

விமான நிலைய அலுவலக பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், அவசர தேவைக்காகவும் மருத்துவத் தேவைக்காகவும் மட்டும் விமான சேவை இயக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பழத்தில் நாட்டு வெடிகுண்டு: மனித நேயமற்ற செயலால் உயிருக்கு போராடிவரும் எருமைமாடு

ABOUT THE AUTHOR

...view details