தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல், கொலை வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது! - சேலம் குண்டர் சட்டம் கைது

சேலம்: கொலை வழக்கில் கைதான இருவர் உள்பட மூன்று பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Breaking News

By

Published : Jun 22, 2020, 3:19 AM IST

சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் லோகநாதன் (35). இவரது மனைவி பெண்கள் அழகு நிலையம் நடத்திவருகிறார். இந்நிலையில் லோகநாதன் அழகு நிலையத்தில் பணிசெய்துவந்த பெண்கள் இருவரைக் கத்தியைக் காட்டி மிரட்டி ஆபாச வீடியோ எடுத்ததாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட லோகநாதன் ஓமலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் அளித்த பரிந்துரையின் பேரில், லோகநாதனைக் குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகரக் காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதேபோன்று எருமாபாளையத்தைச் சேர்ந்த அருள்குமார்(23), தாதகாப்பட்டி, அம்பாள் ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன்(28) ஆகிய இருவரும் கூட்டு சேர்ந்து 2019ஆம் ஆண்டு தாதகாப்பட்டியில் செல்வமணி என்பவரைக் கடுமையாகத் தாக்கினர்.

இச்சம்பவம் தொடர்பாக அன்னதானப்பட்டி காவல் துறையினரால் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர். அதன்பின் சென்ற மே மாதம், மணியனூரைச் சேர்ந்த அபிஷேக் மாறன் என்பவரை கழுத்தை நெறித்து இருவரும் கொலை செய்தனர்.

குண்டர் சட்டத்தில் கைதானவர் (2)
இந்த வழக்கில் அவர்கள் இருவரும் மீண்டும் கைதாகினர். இந்நிலையில், இவர்களின் குற்றச்செயல்களைத் தடுக்க இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர்.
குண்டர் சட்டத்தில் கைதானவர் (1)

இதையும் படிங்க:11 வயது மாணவி பாலியல் வன்புணர்வு: ஸ்மார்ட்போனால் நேர்ந்த விபரீதம்!

ABOUT THE AUTHOR

...view details