தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து விபத்து - State bus crash at Tambaram - Maduravayal bypass

சென்னை: குன்றத்தூர் அருகே தாம்பரம் - மதுரவாயல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு சுவரில் அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்தனர்.

தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து விபத்து
தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து விபத்து

By

Published : Jan 23, 2020, 11:47 PM IST

Updated : Jan 24, 2020, 6:00 PM IST

சேலத்திலிருந்து சென்னை கோயம்பேடு நோக்கி தாம்பரம்- மதுரவாயல் தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் கருப்பண்ணன் ஓட்டினார். பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

தாம்பரம் அருகே குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து பேருந்தில் இருந்தவர்கள் அலறிய சத்தம் கேட்டு சக வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டனர். விபத்தில் ஓட்டுநர், நடத்துனர், பயணி தங்கராஜ் ஆகிய மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயமடைந்த மூன்று பேரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதன் காரணமாக தாம்பரம் மதுரவாயல் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து விபத்து

இதையும் படிங்க:நடுவழியில் கழன்று ஓடிய பேருந்தின் டயர் - சாமர்த்தியமாகச் செயல்பட்ட ஓட்டுநர்!

Last Updated : Jan 24, 2020, 6:00 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details