தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார்மயமாகும் சேலம் உருக்காலை! போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்

சேலம்: சேலம் உருக்காலை தனியார்மயமாவதை தடுக்கும் நோக்கில் உருக்காலை தொழிலாளர்கள் ஆலை நுழைவாயிலின் முன்பு காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தனியார்மயமாகும் சேலம் உருக்காலை ! தடுக்கும் விதமாக காத்திருப்பு போராட்டம் !

By

Published : Aug 5, 2019, 5:08 PM IST

தமிழ்நாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலை தனியார்மயமாக்கும் நோக்கத்தோடு மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் செயல் நிர்வாகம் சர்வதேச பத்து பேருக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆகஸ்ட் மாதம் முதல் தேதி வரை டெண்டர் கோரலாம் என்று அறிவித்திருந்த நிலையில் டெண்டர் கோர யாரும் வராததால் கால நீட்டிப்பை வரும் 20ம் தேதி வரை நீடித்துள்ளது.

தனியார்மயமாகும் சேலம் உருக்காலை! தடுக்கும் விதமாக காத்திருப்பு போராட்டம்

இந்த நிலையில் சேலம் உருக்காலையை பார்வையிட தனியார் துறையினர் ஆலைக்கு வருவதாக தகவல் வெளியானதால், அதை தடுக்கும் விதமாக தொமுச, சிஐடியூ, ஐஎன்டியூசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை முதல் ஆலையின் பிரதான நுழைவாயிலின் முன்பு அமர்ந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details