சேலத்தின் அடையாளமான சேலம் இரும்பாலை, மத்திய அரசின் மிகப் பெரிய பொதுப்பணித்துறை நிறுவனம். இந்த நிறுவனத்தை அமைக்க முன்னாள் முதலமைச்சர்களான காமராஜர், பேரறிஞர் அண்ணாவைத் தொடர்ந்து கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, 1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த நிறுவனம் சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களும். மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்களும் பணிபுரிந்துவருகின்றனர். இந்த இரும்பாலையில் இருந்துதான் ரயில் பெட்டி உற்பத்திக்கு தேவையான இரும்புத் தகடுகளும், நாணயத்திற்குத் தேவையான வில்லைகளும் தயாரிக்கப்படுகிறது.
சேலம் உருக்காலை தனியார் மயமாக்க எதிப்பு தெரிவித்து போராட்டம். மேலும் உலகத்தரம் வாய்ந்த, இரும்பு மற்றும் ஸ்டெய்ன் லஸ் ஸ்டீல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி அதனை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து சர்வதேச அளவிலான டெண்டரை மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. இதற்கு உருக்காலை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
மத்திய அரசு தற்பொழுது சர்வதேச டெண்டர் அறிவித்துள்ளதை தொடர்ந்து தனியார் தறையினர் யாரும் சேலம் உருக்காலையை பார்வையிட வரக்கூடாது என வலியுறுத்தி ஆலையின் பிரதான நுழைவு வாயில் முன்பு உருக்காலை ஊழியர்கள் 19ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.