பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று (செப்.25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களுக்கு பெருந்துயராக மாறியுள்ளது. இந்த நிலையில் அவரின் மறைவிற்கு பல்வேறு இசைக் கலைஞர்கள் தமிழ்நாடு முழுவதும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரங்கத்தில், மேடை இசை கலைஞர்கள் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அவரின் பாடல்களை இடைவிடாமல் ஒரு மணி நேரம் பாடினர். அதனை தொடர்ந்து அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.