தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் ஆயுதப்படை காவலர் கடன் தொல்லையால் தற்கொலை - சேலம் குற்றச் செய்திகள்

சேலம்: தலைவாசல் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவந்த ஆயுதப்படை காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம் காவல் துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

salem-special-task-force-police-officer-suicides
salem-special-task-force-police-officer-suicides

By

Published : Sep 23, 2020, 7:19 PM IST

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அருணின் மகன் வெங்கடேஷ் (28) என்பவர் ஆயுதப்படையில் பணிபுரிந்துவந்தார். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து சேலம் மாவட்டம்தலைவாசல் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (செப். 21) இரவு அவரது தம்பி ஹரிராஜன் என்பவருக்கு போனில் தொடர்புகொண்டு தன்னுடன் பணிபுரியும் காவலர் வேலு என்பவரிடம் கடன் வாங்கி உள்ளதாகவும் கடனை திருப்பித் தரும்படி அவர் நெருக்கடி கொடுப்பதாகக் கூறி மன அழுத்ததில் புலம்பி இருக்கிறார்.

சேலம் ஆயுதப்படை காவலர் வெங்கடேஷ்
இதனையடுத்து ஹரிராஜன், அவரது அத்தை மகன் வெற்றிவேல் இருவரும் தருமபுரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு நள்ளிரவு நேரத்தில், தலைவாசல் காவல் நிலைய எல்லையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தங்கியுள்ள வெங்கடேசனை காணவந்துள்ளனர். அப்போது அவர் தங்கியிருந்த அறையில், லுங்கியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். ஆனால், வெங்கடேனுக்கு உயிர் இருக்க வாய்ப்பு உள்ளதாக இருக்கக்கூடும் என நினைத்து 108 வாகனத்தை வரச்சொல்லி வாகனத்தில் ஏற்றியபோது இறந்துவிட்டதாகத் தெரிந்து அவர்கள் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் தலைவாசல் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தலைவாசல் காவல் நிலைய ஆய்வாளர், வெங்கடேஷ் உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உடற்கூறு ஆய்வு முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
தலைவாசல் காவல் நிலையம்
இதற்கிடையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், வெங்கடேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் அதற்குதத் தேவைப்படும் பணத்தை கடனாக பலரிடம் பெற்று இருந்ததும் தெரியவந்துள்ளது. கடன் நெருக்கடி அதிகரித்து அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தலைவாசல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:கரோனாவால் உயிரிழந்த உதவி ஆய்வாளரின் உடல் நல்லடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details