சேலம் காவலர் பயிற்சி மையத்தின் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் சேகர். இவர்,கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி பரிசோதனை செய்து கொண்டதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா சிகிச்சை பெற்று வந்த உதவி ஆய்வாளர் உயிரிழப்பு! - சேலம் மாவட்ட செய்திகள்
சேலம்: கரோனா வைரஸ் தொற்று பாதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பயிற்சி உதவி ஆய்வாளர் சேகர் (58) நேற்று (செப்.3) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
![கரோனா சிகிச்சை பெற்று வந்த உதவி ஆய்வாளர் உயிரிழப்பு! salem SI died in corona ward](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7814273-corona-death-1-0409newsroom-1599193273-666.jpg)
salem SI died in corona ward
இதனையடுத்து, கருப்பூரில் உள்ள அரசு சிறப்பு மருத்துவ முகாமில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை நேற்று (செப்.3) காலை மோசமாகியுள்ளது.
இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (செப்.3) மாலையே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த சேகருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.