தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் தாக்கி மாணவன் கை எலும்பு முறிவு! - ,சேலம் ஆசிரியர் தாக்கி மாணவர் கை எலும்பு முறிவு

சேலம்: பள்ளி மாணவனை ஆசிரியர் கடுமையாக தாக்கியதில் மாணவனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

attack
attack

By

Published : Dec 9, 2019, 3:15 PM IST

சேலம் அம்மாபேட்டையில் அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இதில் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த நந்தகுமாரின் மகன் சஞ்சய் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இப்பள்ளியின் ஆசிரியர் குமார், மாணவன் சஞ்சயை அடித்துள்ளார். அதில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் தாக்கி மாணவன் கை எலும்பு முறிவு

இதனையடுத்து ஆசிரியரால் மாணவன் தாக்கப்பட்டது குறித்து பெற்றோர்கள் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் அடித்து மாணவன் கை எலும்பு முறிந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details