தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் - சங்ககிரி பிரதான சாலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு! - Accident on Salem Sankagiri main road

சேலம் - சங்ககிரி பிரதான சாலையில் ஆம்னி பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் சங்ககிரி பிரதான சாலையில் விபத்து
சேலம் சங்ககிரி பிரதான சாலையில் விபத்து

By

Published : Aug 4, 2020, 1:28 PM IST

கேரள மாநிலம், கொச்சின் பகுதியிலிருந்து ஒடிசா மாநிலத்திற்குப் பணிக்கு செல்வதற்காக 50-க்கும் மேற்பட்ட நபர்களை ஏற்றிக் கொண்டு ஆம்னி பேருந்து ஒன்று, சேலம் மாவட்டம் சங்ககிரி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது எஸ்.பாலம் என்ற பகுதியில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது, ஆம்னி பேருந்து மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்த பேருந்தானது பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. மேலும் பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சங்ககிரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.மேலும், ஆம்னி பேருந்தில் வந்த அனைவரும் முறையான இ - பாஸ் பெற்றுள்ளனரா? அல்லது முறைகேடாக கேரளாவிலிருந்து வந்தார்களா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்னி பேருந்தும்,இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

ABOUT THE AUTHOR

...view details