தமிழ்நாடு

tamil nadu

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

By

Published : Jul 25, 2020, 6:14 PM IST

சேலம்: மாநகராட்சியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலியாகப் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சேலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பணிநிறந்தரம் செய்ய வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!
Sanitizing workers protest in salem

சேலம் மாநகராட்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையிலும், மாத ஊதியத்திலும் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலியாக பணியாற்றும் 659 தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, வரும் ஜூலை 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சேலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் சங்கத் தலைவர் சுதாகரன் கூறுகையில், "அரசு விதிப்படி சேலம் மாநகராட்சியில் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு 3 ஆயிரத்து 500 தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

ஆனால் தற்போது குறைவான பணியாளர்களே சேலம் மாநகராட்சியில் பணியாற்றிவரும் நிலையில், 659 தொழிலாளர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலியாகப் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதை நிறைவேற்றாமல் சேலம் மாநகராட்சி நிர்வாகம் காலதாமதம் செய்துவருவதால் வரும் ஜூலை 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details