சேலம் பொன்னம்மாபேட்டை பாண்டியன் தெருவைச் சேர்ந்த பெண்மணி ஒருவரிடம் 2019ஆம் ஆண்டு மே மாதம் வீண் தகராறில் ஈடுபட்டு, அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக சிம்ரன் (எ) மோகன்ராஜ் (23) என்பவர் மீது அம்மாபேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமினில் வெளிவந்த மோகன்ராஜ், 2019 ஆகஸ்ட் மாதம் அம்மாபேட்டை வாய்க்கால்பட்டறையைச் சேர்ந்த ராஜேஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து, ரூ.2,200ஐ பறித்துச் சென்றார். இந்த வழக்கில் கைதாகி மீண்டும் ஜாமினில் வெளிவந்த மோகன்ராஜ், கடந்த ஜனவரி 1ஆம் தேதி பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த மகேஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டு கொலைசெய்ய முயற்சி செய்த்தார்.
தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சேலம் ரவுடி குண்டர் சட்டத்தில் கைது - சேலம் ரௌடி கைது
சேலம்: தொடர் வழிப்பறி, கொலைமுயற்சி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி மோகன்ராஜ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே கடந்த பிப்.5ஆம் தேதி பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் பகுதியில் நடந்துவந்த மணிகண்டனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 1 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். இதுதொடர்பான புகாரில் மோகன்ராஜை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இவர் சிறையிலிருந்து வெளிவந்து தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததைத் தொடர்ந்து, அவரைக் குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையர் பி. தங்கதுரை, மாநகர காவல் ஆணையர் த. செந்தில்குமாருக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் ரவுடி மோகன்ராஜ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.