தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உரிய ஆவணங்களின்றி ரயிலில் எடுத்துவரப்பட்ட மூன்று கிலோ தங்கநகைகள் பறிமுதல்! - salem district news

உரிய ஆவணங்களின்றி ரயிலில் எடுத்துவரப்பட்ட மூன்று கிலோ தங்க நகைகளை சேலம் ரயில்நிலைய காவலர்கள் இன்று பறிமுதல் செய்தனர்.

salem railway police seized 3 kg gold without proper documentation
உரிய ஆவணங்களின்றி ரயிலில் எடுத்துவரப்பட்ட மூன்று கிலோ தங்கநகைகள் சேலத்தில் பறிமுதல்

By

Published : Feb 9, 2021, 5:11 PM IST

சேலம்: சேலம் வழியாக ரயிலில் தங்கம், வெள்ளி நகைகள் உரிய ஆவணங்களின்றி கடத்திச் செல்லப்படுவதாக, சேலம் ரயில்வே காவலர்களுக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சென்னையில் இருந்து சேலம் வழியாக கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 11 மணியளவில் வந்தது. அதில், சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாகீரித், சிவ்ராஜ் ஆகிய இருவரைப் பிடித்து ரயில்வே காவலர்களின் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர்.

அதில், உரிய ஆவணங்களின்றி பாகீரித் சுமார் ஒன்றரை கிலோ அளவிலான தங்கத்தையும், சிவ்ராஜ் 1.69 கிலோ எடையுள்ள தங்க நகைகளையும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து 3.14 கிலோ எடையளவுள்ள தங்கநகைகளை கைப்பற்றிய ரயில்வே காவலர்கள், இதுதொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:லாரி சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு: நெஞ்சை பதைபதைக்க செய்யும் சிசிடிவி காட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details