மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து பல்வேறு அரசியல் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சேலம் அயோத்தியாபட்டணம் பகுதியில் கல்வி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெண்கள், பள்ளி மாணவிகள் கோலம் தீட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: கோலம் தீட்டும் போராட்டத்தில் பள்ளி மாணவிகள் - சேலம் மாவட்ட செய்திகள்
சேலம் : அயோத்தியாபட்டணம் பகுதியில் கல்வி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெண்கள், பள்ளி மாணவிகள் கோலம் தீட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
salem protest for New education policy
இந்த கோலத்தில், தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும், குழந்தை விரோத கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும், இந்தி சமஸ்கிருதத்தை திணிக்கும் கல்வியை கைவிட வேண்டும் என வாசகம் வரைந்து தங்கள் எதிர்ப்பை பள்ளி குழந்தைகள் பதிவு செய்தனர்.
இதேபோல, சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக்கோரி, வீட்டு வாசலில் கோலம் வரைந்து தங்களின் எதிர்ப்பை பள்ளி மாணவிகள் தெரிவித்தனர்.