சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த நரிப்பள்ளம் பகுதியில் சேலத்திலிருந்து நேபாளம் சென்றுகொண்டிருந்த டூரிஸ்ட் வேன் சாலையைக் கடக்க முயன்றபோது, பெங்களூருவிலிருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
ஓமலூர் அருகே வேன் மீது பஸ் மோதி 6 நேபாளிகள் உயிரிழப்பு! - சேலம் இன்றய செய்தி
சேலம்: ஓமலூர் அருகே சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியதில் நேபாளத்தைச் சேர்ந்த ஆறு பேர்கள் உயிரிழந்தனர்.
பேருந்தும் டூரிஸ்ட் வேனும் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு 24 பேர் படுகாயம்
இந்த விபத்தில் நேபாளத்தைச் சேர்ந்த ஆறு பேர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 24 பேர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ஓமலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:அவினாசி கோர விபத்து: உயிரிழப்பு 20ஆக உயர்வு; மீட்புப் பணிகள் தீவிரம்