தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அச்சமின்றி வாக்களிக்க சேலத்தில் விழிப்புணர்வு பேரணி - Police voter awareness rally

சேலம்: தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், சேலத்தில் மாநகர காவல் படையினர், துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

TN Election

By

Published : Mar 27, 2019, 11:02 PM IST

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தலில் மக்கள் நூறு விழுக்காடு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது.

இதனைத்தொடர்ந்து, தேர்தலில் பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்கும் வகையில் சேலத்தில் மாநகர காவல் துறையினர், துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இந்தப் பேரணியானது சேலம் பழைய சூரமங்கலம் அருகே உள்ள அம்மா பாளையத்தில் தொடங்கி, ஜாகிர் அம்மாபாளையம், உழவர் சந்தை, அப்பா பைத்தியசாமி கோவில் பகுதி, திருவா கவுண்டனூர் புறவழிச்சாலை பகுதியில் முடிவடைந்தது.

இந்தப் பேரணியில் சேலம் மாநகர ஆணையர் சங்கர், துணை ஆணையர் உள்ளிட்ட காவல் துறையினர் கலந்துகொண்டனர்.காவல்துறை அணிவகுப்பு பொதுமக்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலத்தில் காவல்துறை பேரணி

ABOUT THE AUTHOR

...view details