தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை - சேலத்தில் பரபரப்பு - பிரபல ரவுடி ஆனந்தன் கொலை

சேலம் அருகே பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை நள்ளிரவில் வைத்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்த கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 6, 2023, 5:42 PM IST

சேலம் அடுத்த வலசையூர் அருகில் உள்ள காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர், ஆனந்தன் (44). பிரபல ரவுடியான காட்டூர் ஆனந்தன் மீது கொலை, ஆள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் வீராணம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் உள்ளன. மேலும், இவருக்கு உறவினர்களிடையே நிலப் பிரச்னை தொடர்பாக நடந்த அடிதடி வழக்குகளும் காட்டூர் ஆனந்தன் மீது நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் நேற்றிரவு (பிப்.05) 12 மணியளவில் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக நண்பர் பிரபாகரன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு வலசையூர் அருகே காட்டூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார், காட்டூர் ஆனந்தன். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்புறமாக அமர்ந்து சென்ற காட்டூர் ஆனந்தனை, பின்னால் இருசக்கர வாகனத்தில் துரத்தி வந்த சிலர் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அருகில் உள்ள விவசாய நிலத்தில் இறங்கி ஆனந்தன் ஓடினார். அவரை பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற ஆறு பேர் கொண்ட கும்பல், ஆனந்தனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில், கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஆனந்தன் உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் மற்றும் சேலம் மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஆனந்தனின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே இரட்டை கொலை வழக்கு மற்றும் ஆள் கடத்தல் வழக்கு உள்ளதால், முன்விரோதம் காரணமாக இக்கொலை நடைபெற்றதா? அல்லது நிலப் பிரச்னையால் உறவினர்களுக்கு இடையே இருந்து வந்த பகையால் ஏற்பட்டதா? என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கரூரில் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை!

ABOUT THE AUTHOR

...view details