தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பார்சல் நிறுவனத்தில் தடைசெய்யப்பட்ட 1,500 கிலோ குட்கா பறிமுதல்

சேலம்: 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட 1,500 கிலோ புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

salem

By

Published : Oct 21, 2019, 9:52 AM IST

சேலம் மாவட்டம் கோனேரிக்கரையில் உள்ள தனியார் குடோனை சித்திக், ஆரிப் என்ற இருவர் வாடகைக்கு எடுத்து நடத்திவந்தனர். இந்நிலையில், அவர்கள் நடத்தும் குடோனிற்கு உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத் என்ற இடத்திலிருந்து தனியார் பார்சல் சர்வீஸ் மூலமாக தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான ஹான்ஸ், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வருவதாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் சூரமங்கலம் காவல் ஆய்வாளர் செந்தில் தலைமையிலான காவல் துறையினர் தனியார் பார்சல் சர்வீஸ் கம்பெனியில் ஆய்வு செய்தபோது அதில் பான்மசாலா, புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பார்சல் வந்த முகவரிக்கு சென்று காவல் துறையினர் சோதனை செய்தபோது குடோனில் மறைத்து வைக்கப்பட்ட பான்மசாலா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள்

பறிமுதல் செய்யப்பட்ட 1,500 கிலோ போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.7 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிச்சிபாளையத்தில் உள்ள சித்திக் இல்லத்தில் பதுக்கி வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் கைப்பற்றினர்.

தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்த சித்திக், ஆரிப் ஆகியோரிடமும் இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details