தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் மார்ச் 19ஆம் தொடங்கி, நேற்றுவரை (மார்ச் 26) வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.
சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட, பாமக அதிருப்தி பிரமுகர்ஏபி.குமார் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவருடன் சேர்த்து மொத்தம் 37 பேர் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏ.பி.குமார் உட்பட 22 சுயேட்சை வேட்பாளர்களின்வேட்புமனுக்களில்போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஏபி.குமார் தனது மனு நிராகரிப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புகார் தெரிவித்தார். மனு நிராகரிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், "அதிமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்ததுபெரும்பாலான தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை.