தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழங்குடியின மாணவர்கள் பயிலும் பள்ளியை சீரமைக்க கோரிக்கை!

சேலம்: இடிந்து விழும் நிலையில் உள்ள பழங்குடியின மாணவர்கள் படிக்கும் பள்ளியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

salem-people-request-to-reconstruct-the-tribe-students-school
பழங்குடியின மாணவர் பயிலும் பள்ளியை சீரமைக்க கோரிக்கை!

By

Published : Feb 27, 2020, 12:26 PM IST

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே எடப்பாடி என்கின்ற மலைவாழ் கிராம் உள்ளது மேலும் இக்கிராமத்தை சுற்றி மேலும் சில கிராமங்கள் உள்ளன. எடப்பாடி கிராமத்தில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர்.

சீரமைக்காத பள்ளியின் கட்டடம்

இப்பள்ளியில் உள்ள கட்டடங்கள் மிகவும் சேதமடைந்து இடியும் தருவாயில் உள்ளதால் பள்ளிக்கு குழந்தைகள் வருவதற்கே அச்சப்படுகிறார்கள். இங்கு மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் சரிவர இல்லாததால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அப்பகுதி கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்த நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அந்தப் பள்ளியில் அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறுவதற்கு முன்பே, கல்வித்துறை அலுவலர்கள் அப்பள்ளியை பார்வையிட்டு போதிய வசதிகளை செய்து கொடுக்கவும், பள்ளியின் கட்டடங்களை புதுப்பித்து தரவேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை

வைத்துள்ளனர்.

பழங்குடியின மாணவர் பயிலும் பள்ளியை சீரமைக்க கோரிக்கை!

இதையும் படிங்க: மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: தட்டிக்கேட்டதற்கு ஆபாச பதிலளித்த பள்ளி நிர்வாகம்... வலைவீசும் காவல் துறை!

ABOUT THE AUTHOR

...view details